நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊதியமின்றி விடுமுறை, 30% வரை ஊதியக் குறைப்பு என விமான நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பயணிப்பதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தவிர பிற விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். ஊரடங்கு அமலில் சரக்கு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை இயங்க அனுமதிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.