Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று புண்ணால் அவதியா….? இது மருந்தாக இருக்கும்…!!

பலவகையான மருத்துவ குணங்களை கொண்ட அதிமதுரத்தின் சிறப்பு பற்றிய தொகுப்பு

அதிமதுரத்தின் வேரை சுவைத்து சாப்பிட்டு வந்தால் அதன் இனிப்பு தன்மை தொண்டையில் நிலைத்திருந்து நாக்கு வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.

அதிமதுரத்தின் வேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வருவதால் குரல் இனிமையாக மாறும்.

புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அதிமதுரத்தை மென்று வந்தால் எளிதில் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற முடியும்.

அதிமதுரம், கடுக்காய் மற்றும் மிளகு இவை மூன்றையும் பொடித்து பொடியாக தினமும் சாப்பிட்டு வருவதனால் வறட்டு இருமலைப் போக்க முடியும்.

சாதம் வடித்த தண்ணீருடன் அதிமதுரப் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.

Categories

Tech |