கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது.
மேலும் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு மதிப்பார்கள் என யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். வீட்டிற்கு வெளியே போனால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், வீட்டில் இருந்தால் கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 130 கோடி இந்திய மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு நாம் பார்த்திருப்போம். கொரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது என்று கூறினார்.