Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். சமண மக்கள் மகாவீரர் ஜெயந்தியை இன்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

महावीर जयंती देशभर में मनाई जा रही ...

இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து நாட்டு மக்களுக்கும் இனிய மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள். பகவான் மகாவீரரின் உண்மை, அகிம்சை, துறத்தல் மற்றும் சிக்கனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவே இருக்கும்”  எனக் கூறியுள்ளார்.

மகாவீரர் என்பதன் அர்த்தம் மனதை அடக்கி வென்றவர் என்று பொருள். பகவான் மகாவீரரின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மக்களே சமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Categories

Tech |