Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்; இந்தியா முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது – ப. சிதம்பரம் ட்வீட்!

இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்,  இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை எதிர்க்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

அரசு எடுத்த நடவடிக்கையில் குறைகளை எடுத்துக்கூறினால், அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |