Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோரப்பசி.. 70 ஆயிரத்தையும் நெருங்குகிறது உயிரிழப்பு..!!

கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர்.

இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் உயிரிழப்பு 9,606, பாதிப்பு 3 லட்சத்து 36 ஆயிரத்து 327 பேர் எனவும் உள்ளது.

பிரான்சில் 8 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 621 பேரும், ஈரானில் 157 பேரும் பலியாகியுள்ளனர். சீனாவில் உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் 1,447 பேரும், நெதர்லாந்தில் 1,766 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |