தமிழக அரசு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸால் இந்தியாவில் 77 பேர். பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் பங்கேற்றுள்ளனர்.