ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வழக்கமான செல்லப்பிராணிகளை தவிர்த்து சற்று வித்தியாசமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் பற்றிய தொகுப்பு
செல்லப்பிராணிகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செல்லப்பிராணிகளை பிடிக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் மன அழுத்தம் குறைகிறது. செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே இருக்கும். ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
செல்ல பிராணிகளில் சிலருக்கு நாய்க்குட்டிகளை பிடிக்கும் சிலருக்கு பூனைகளைப் பிடிக்கும் சிலருக்கு பறவைகள் பிடிக்கும். ஆனால் நாம் இந்தத் தொகுப்பில் காண இருப்பது இந்த மாதிரியான செல்லப்பிராணிகளை அல்ல சற்று வினோதமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள். அவை,
கரடி
ரஸ்யாவில் 136 எடை கொண்ட கரடி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் இந்த கரடியின் தற்போதைய வயது 25. இந்த கரடிக்கு பெயரும் வைத்துள்ளனர் இதன் பெயர் ஸ்டீபன். இதை கரடி என்று கூறுவதை விட அந்த வீட்டில் ஒரு குழந்தை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அதனை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர்.
எருமை
எருமை என்றதும் நம் ஊரில் வளர்க்கப்படும் எருமை அல்ல. இது 1136 எடை கொண்ட வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் எருமை. இது நம்ம ஊரு எருமை போல இல்லை மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் எருமை. வளர்ப்பவர்கள் அப்படி வளர்க்கிறார்கள்.
கேபி பாரா (கொறித்து உண்ணி)
எந்த பொருளையும் கொறித்து உண்ணக்கூடிய இந்த வித்தியாசமான விலங்கை இவர்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். 60 கிலோ எடை வரை வளரும் இது அதிகப்படியான நேரம் தண்ணீரில் செலவழிப்பதால் இதற்கென்று தனியாக நீச்சல் தொட்டி ஒன்றும் அமைத்துள்ளனர்.
ஃபென்னெக் நரி
நாய்களை காட்டிலும் அதிக அளவு ஸ்டாமினா கொண்ட இது வளர்ப்பது மிகவும் கடினமான செயல். சுறுசுறுப்பு தன்மை நிறைந்த இது திருடர்கள் வீட்டில் வந்து திருடிவிட்டு வெளியில் போவதற்கு முன்னரே பிடிக்கும் அளவுக்கு வேகம் கொண்டது.
அல்பாக்கா
ஒட்டகை இனத்தை சேர்ந்த ஒரு வகையான விலங்குதான் அல்பாக்கா ஆனால் இது ஒட்டகத்தின் அளவு வளர்வது இல்லை. இப்படி ஒரு செல்லப் பிராணி சிறுவனுக்கு அவனது பெற்றோர் வழங்கியுள்ளனர். இதனை பார்ப்பதற்கு அக்கம்பக்கத்தினர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
வரிவால் லெமூர்
குரங்கு இனத்தை சேர்ந்த இந்த விலங்கை வீட்டில் வளர்ப்பது மிகவும் கடினமான விஷயம். குரங்கு எங்குவேண்டுமானாலும் தாவும் எதில் வேண்டுமானாலும் நடக்கும் இந்தப் பிரச்சனையினால் அதனை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனாலும் வளர்த்து வருகின்றனர்.
பாம்பு
பாம்பு என்றால் படையே நடுங்கும் எனும் பொழுது வெளிநாட்டினர் இதையே செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர் ஏன் நம் ஊரில் பாம்பாட்டிக்கு கூட பாம்பு செல்லப்பிராணி தான். உயிரைப் பற்றி கவலைப்படாத யாராயினும் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கலாம்.