Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார்.

இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களின் குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. டெல்லியில் COVID-19 பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த முதல் குழந்தை இதுவாகும். தற்போது, தாயும் குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |