சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக கவசம் அணியாமலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும் வந்தவர்களையும் காவல்துறையினர் முதுகில் லத்தியால் அடித்தும் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
press ஸ்டிக்கர் ஒட்டி வந்த வாகனத்தில் வந்தவர்களை விசாரித்த போலீசார் அவர்கள் பத்திரிகையாளர்கள் இல்லை என்று தெரிந்ததும், ஸ்டிக்கரை அளித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை நகர் முழுவதும் காவல்துறையினர் ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் பகுதியில் தினந்தோறும் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு கேமராக்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசியமின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.