டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உ.பி.யில் 113 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் எண்ணிக்கையால் நாட்டில் பரபரப்பான சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பினை தடுக்க மருத்துவர்களும், மருத்துவ அதிகாரிகளும் மற்றும் காவல்துறையினரும் இரவு பகல் பாராது சேவை செய்து வருகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு நாம் தலைவனகுவது மிகவும் அவசியம்.