Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.

உணவு தொடர்பான அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் 1,885 பேர் கொரோனா அரசால் பாதிக்கட்டுள்ள நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 328 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,26,000ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,18,586 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனோவால் அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே சிங்கப்பூரிலும்ஏப்.,7ம் தேதி முதல் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |