Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமல் தொல்லைகளுக்கு… எளிமையான கஷாயம்…!!

அரைக்கீரை மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

அரைக் கீரை தண்டு        –   ஒரு கைப்பிடி

மஞ்சள்                                    –   சிறிதளவு

மிளகு                                       –   15

செய்முறை

  • முதலில் மிளகை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • அரைக் கீரையில் கீரைகளை எடுத்துவிட்டு தண்டை மட்டும் எடுத்து வைக்கவும்.
  • தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி பாத்திரம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் அதனுடன் பொடித்து வைத்துள்ள மிளகுத் தூளையும் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
  • நன்றாக கொதித்து தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து வடிகட்டிவிடவும்.

நன்மைகள்

நுரையீரல் சார்ந்த குறைபாடு, சளி மற்றும் இருமல் தொல்லைகள் குணமாக இதனை குடித்து வருவது நல்லது.

Categories

Tech |