Categories
பல்சுவை

ஜைன மத துறவு நெறியின் கடுமையான கட்டுபாடுகள்…!!

ஜைன மதம் என்பது சமண சமய மதமாகும். இது மஹாவீரரால் கிமு ஆறாம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது.  இந்து மதங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் கடினமானது ஜைன துறவு வாழ்க்கையாகும்.

ஜைன துறவிகளின் கட்டுப்பாடுகள் 

  • துறவிகள் செருப்பு அணியக்கூடாது.
  • வெள்ளை ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும்.
  • சமைத்து உண்ணக்கூடாது.
  • ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க கூடாது.
  • பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.
  • மண் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
  • இருட்டி விட்டால் உணவருந்த கூடாது.
  • தனது தலைமுடியை தனது கையாலேயே பிடுங்கிக் கொள்ள வேண்டும்.

இந்துக்களுக்கு காசி புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. அதேபோல் ஜைனர்களுக்கு புண்ணிய ஸ்தலமாக கருதப்படுவது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சத்ருஞ்சய மலையாகும். சத்ருஞ்சய மலையானது 3745 படிக்கட்டுகள் கொண்டதாகும். இந்த மலையை ஜைனத் துறவிகள் ஒரு நாளைக்கு இருமுறை ஏறி இறங்குகின்றனர். இந்த சத்ருஞ்சய மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தனை ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து எப்படித்தான் இத்தனை கோவில்களைக் கட்டினார்கள் என்பது இன்றளவும் வியக்கவைக்கும் ஒன்றாக கருதப்படுகிறது.

Categories

Tech |