Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: ஊரடங்கை பயன்படுத்தி மர்மநபர்கள் சூறை!

கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. மேலும், முதுபான கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. கேரளாவில், மதுபான கடைகள் மூடப்பட்டதால் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மதுபான விநியோகம் 3 வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கலால் துறை மற்றும் காவல் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

Categories

Tech |