கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க கூடுதலாக ரூ. 3000 கோடி தேவை என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசின் கோரிக்கையான ரூ. 9 ஆயிரம் கோடியை வழங்கவும் பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 2020-21ம் ஆண்டுக்கான மாநில நிதியை முன்னதாகவே வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார். நகர் மற்றும் புறநகர் பகுதிக்கான தொகையில் 50 சதவிகித்தை நிதிக்குழு உடனடியாக விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.