பிரிட்டனில் NHS ஊழியர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நிதி திரட்டி வழங்கிய இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ வீரரான கேப்டன் Tom Moore(99). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். இந்நிலையில் இவர் கொரோனா காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அயராது பணியாற்றிய NHS ஊழியர்களுக்கு உதவ முடிவு செய்தார். இதன்படி தற்போது 99 வயதாகும் இவர் தன் தள்ளாடும் காலத்திலும்கூட அவரின் தோட்டத்தை சுமார் நூறு தடவை சுற்றி வருவதற்கு முடிவு செய்துள்ளார்.
I'm so sorry to hear that Captain Tom has passed away in hospital.
He was a great British hero that showed the best of our country & I send my best wishes to his family at this time.
— Matt Hancock (@MattHancock) February 2, 2021
மேலும் இதனை தனக்கு 99 வயது பூர்த்தி ஆவதற்குள் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இதன்படி அவரின் இளைய மகளான Hannah இவர்க்கு உதவ “just Giving” என்ற ஒரு கணக்கை ஆரம்பித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியை மருத்துவ ஊழியர்களுக்கும் வழங்குமாறு மக்களிடம் கோரியுள்ளார். மேலும் அவர் ராணுவத்தில் பெற்ற மெடல்கள் மற்றும் கோட் அணிந்து தன் வாக்கரை எடுத்துக்கொண்டு தோட்டத்தில் நடக்க துவங்கியுள்ளார்.
இதில் 1000 பவுண்டுகள் பெறுவதே அவரின் நோக்கமாக இருந்த நிலையில், 50,000 பவுண்டுகள் பின்னர் 1,00,000 பவுண்டுகள், இறுதியாக 32 மில்லியன் பவுண்டுகள் வரை நிதி கிடைத்துள்ளது. இவர் இந்த செயல்பாட்டிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரிட்டனில் மக்களின் ஹீரோவாக திகழ்ந்த Tom Moore தன் 100 வயதில் காலமானார். இது குறித்த அறிக்கை ஒன்றை அவரது மகள்கள் வெளியிட்டிருந்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்களுடைய அன்பான தந்தை Tom Moore அவர்களின் இழப்பை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். அவரது வாழ்வின் கடைசி நிமிடங்களில் அவருடன் நாங்கள் இருந்ததற்கு பெருமைப்படுகிறோம். மிகச்சிறிய காலத்தில் பலரது மனதில் இடம்பிடித்தார். இதனால் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்கிறோம். மேலும் இந்த அற்புதமான மனிதர் வாழ்ந்த நூறு ஆண்டுகளை நினைவில் வைப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.