Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று.. மாநகராட்சி ஆணையர்..!

சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கும் வண்ணம் சென்னை மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார். மேலும் பாதுகாப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 210 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதவிர, சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த ஆறு மண்டலங் களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |