Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

97 1/2 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

97 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாரதி நகரில் ராமையா(48) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ராமையாவுக்கு அறிமுகமான ஒருவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமையா தனது பணம் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களின் பணம் என மொத்தம் 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

ஆனால் அந்த நிறுவனத்தினர் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், வட்டியை தராமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ராமையா புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி நிதி நிறுவன உரிமையாளர் ராபர்ட்(60), மணிமேகலை(45), ரூபன் சாமுவேல்(47) உள்பட எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |