மின்சார வாகனங்கள் செய்வதில் உலகின் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் புதிதாக வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் அது விற்பனை செய்த 947 கார்களை திரும்ப பெற்றதாக தெரியவந்துள்ளது . அதற்கு காரணம் காரில் ரிவர்ஸ் எடுப்பதற்காக முன்பகுதியில் டிஸ்பிலே ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அது மெதுவாக செயல்படுவதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல் விபத்து நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 மென்பொருள் மூலம் செயல்படுகிறது. இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பினால் தான் இவ்வாறு நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.