உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி இதில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல தரப்பின தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பகவானி தேவி சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் மூன்று தங்கங்களை வென்றிருந்தார். அதேபோல டெல்லியில் நடைபெற்ற தடகள போட்டியிலும் 100 மீட்டர் ஓட்டம், குண்டி எரிதல் மற்றும் ஈட்டி எறிதலில் மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்திருந்தார். அவருக்கு பல்வேறு தரப்பின தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.