ராஷ்மிகா ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்ற ராஷ்மிகாவை ரசிகர்கள் சிலர் பின் தொடர்ந்தார்கள். இதை கவனித்த ராஷ்மிகா காரை நிறுத்த சொல்லி ஹெல்மெட் போட்டுக்கோங்க என அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றது. மேலும் ரசிகர்கள் ராஷ்மிகா தங்களின் இதயத்தை வென்றதாக பதிவிட்டு வருகின்றார்கள்.