Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சைக்கு மத்தியில் அடுத்த பாடல்… பார்ட்டி ஆரம்பிக்கலாமா.? ஷாருக்கான் பதிவு..!!!

பதான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்தின் அடுத்த பாடலான ஜூம் பூம் தூம் பாடல் வெளியாகியிருக்கின்றது. இதனை ஷாருக்கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து பார்ட்டி ஆரம்பிக்கலாமா? என பதிவிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Categories

Tech |