Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் ட்விட்… “இது எப்போ..?” ஷாக்கான இயக்குனர்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி..!!!

ரசிகரின் ட்விட்டர் பதிவை பார்த்த இயக்குனர் அதிர்ச்சியாகியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சென்னை செம்மொழி பூங்காவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து வருவதாகவும் வெளி நபர்களை அனுமதிக்கவில்லை எனவும் புகைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவருக்கு பதில் கூறும் விதமாக, “இது எப்போ?” என பதிலளித்திருக்கின்றார். இதன் மூலம் அந்த ரசிகரின் பதிவு வதந்தி என பலரும் சோசியல் மீடியாவில் கூறி வருகின்றார்கள்.

https://twitter.com/ArunMatheswaran/status/1605638800188837900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1605638800188837900%7Ctwgr%5Eb26f6eaab9472e52a0fcac1fbf6d37ea6addc2ce%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2F

Categories

Tech |