Categories
சினிமா தமிழ் சினிமா

காலாவதியான பாபா…! மூத்த குடிமக்கள் தான் பார்க்குறாங்க.. கடுமையாக விமர்சித்த ப்ளு சட்டை..!!!

பாபா 2 திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை.

இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதிதாக மறு தொகுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. படத்தில் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு சென்ற டிசம்பர் 1-ம் தேதி மறு வெளியீடு செய்தனர்.இதுவரை தமிழகத்தில் மொத்தமாக இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பகிருந்த ட்விட்டில், காலாவதியான பாபா திரைப்படம் மீண்டும் தோல்வி அடைந்தது. சில மூத்த குடிமக்கள் தான் படத்தை பார்த்து வருகின்றார்கள். இளைய தலைமுறையினர் படத்தை நிராகரித்து விட்டனர் என குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் பயமுறுத்தும் அறிவுரைகள், வேடிக்கையான அரசியல் பஞ்ச்கள் அடங்கிய படத்தைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என விமர்சித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விளாசி வருகின்றார்கள்.

Categories

Tech |