கேரள சட்டசபையில் அமைச்சர் பிரபல நடிகரை உருவ கேலி செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
மலையாள திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் நடிகர் இந்திரன்ஸ். இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். அண்மையில் கேரள சட்டசபையில் அமைச்சர் வாசன் எதிர்க்கட்சியை விமர்சிக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்பு அமிதாப்பச்சன் போல இருந்தது. ஆனால் தற்போது நம்ம ஊர் நடிகர் இந்திரன்ஸ் போல ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அவர் உயரம் குறைவாக இருப்பதால்தான் அவரை ஒருவர் கேலி செய்திருக்கின்றார் என பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாவது, தான் எந்த ஒரு தவறான நோக்கத்திலும் அப்படி சொல்லவில்லை என தெரிவித்தார். இதன்பின் சபை குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளானது நீக்கப்பட்டது. இது பற்றி நடிகரிடம் கேட்டபோது, அவர் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்தை கூற உரிமை இருக்கின்றது. இது என்னை அவர் சிறுமைப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நான் அமிதாப் பச்சன் போல் உயரமானவன் கிடையாது. என்னுடைய உயரத்திற்கு அவரால் பொருந்தி போக முடியாது என தெரிவித்துள்ளார்.