விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் பேசி உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதன்பின் கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடைசியாக கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது இதன் மூலம் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார்.
தளபதி 67 திரைப்படத்தின் பூஜை அண்மையில் ஏவியம் ஸ்டூடியோவில் நடந்தது. விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதன் பின்னரே தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, விக்ரம் திரைப்படத்தில் முதல் பாதியின் டப்பிங்கை பார்த்து நான் மிகவும் ஷாக் ஆனேன். அதில் கமலுக்கு ஒரே ஒரு வசனம் தான் இருந்தது. இதனால் கமலை பார்க்க வந்த ரசிகர்களுக்கு படத்தின் முதல் பாதியில் குறைவான காட்சிகள் கமல் வந்தால் என்ன ஆகும் என பயந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. படத்தை கமல் ரசிகர்கள் கொண்டாடினார்கள் என தெரிவித்துள்ளார்.