கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி சண்டை பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. காமெடி, ஆக்சன், எமோஷனல் என அனைத்தையும் கொண்ட திரைப்படமாக தியேட்டரில் வெளியாகி குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பயிற்சியாளர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பயிற்சி எடுக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவிற்கு தற்போது பலரும் தீயாக இருக்கிறது என கமெண்ட்களை குவித்து வருகின்றார்கள்.
https://www.instagram.com/aishu__/?utm_source=ig_embed&ig_rid=964ca39c-8f55-475d-8e4e-18366c77c4da