Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

91 710 91 710க்கு CALL பண்ணுங்க மக்களே…! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின் …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், வருகிற 29-ஆம் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து என்னுடைய பிரச்சாரத்தை தொடங்குகின்றேன். அடுத்த முப்பது நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளில் உள்ள மக்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றேன்.

நான் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களில் அந்த தொகுதியைச் சார்ந்த கிராமம், வார்ட் மக்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப் போகின்றோம். ஒவ்வொருவருடைய குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் கொடுக்கப் போகின்றோம். அதை பெற்றுக்கொண்டு திமுக ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்களில் இவை அனைத்தும் சரி செய்யப்படும் என உறுதியளிக்கின்றேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்கள் பிரச்சனையை தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசினுடைய முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கக்கூடிய உறுதிமொழி என ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதற்கான ஒப்புகைச் சீட்டு மக்கள் கையில் வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து மக்கள் முன்பே பாதுகாப்பாக நானே சீல் வைக்கப் போகின்றேன். இந்த கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள், கலந்து கொள்ள முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு சில வசதிகள் பண்ணி கொடுத்துள்ளோம்.

ஸ்டாலின் அணி செயலி மூலமாக இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளம் (www.stalinani.com) வாயிலாக பதிவு செய்யலாம். அதே போல  91 710 91 710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை அதில் பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பை ஊடகங்களின் மூலமாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

Categories

Tech |