Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய்…!!

இட்லி மாவினை பயன்படுத்தி சுவையான தேன் மிட்டாய் செய்யலாம்…!

 

தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 2கப்
அரிசி – 200 கிராம்
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
உப்பு
எலுமிச்சைபழசாறு
சமையல் சோடா
கேசரி பவுடர்
தண்ணீர்

செய்முறை:

முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . 3 சொட்டு எலுமிச்சைபழசாறு சேர்த்துக்கொள்ளலாம். பாகு பதம் வந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளலாம்.

200 கிராம் அளவிற்கு அரிசி, 50 கிராம் அளவிற்கு உளுத்தம்பருப்பு எடுத்துக் கொண்டு தனித்தனியாக கழுவி நாலு மணி நேரம் ஊற வைத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து   நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளலாம். சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் சிறிதளவு ஆரஞ்சு நிற கேசரி பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.ஒரு ஸ்பூன் அளவுக்கு சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கிவிடவும். வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இந்த மாவினை கால் ஸ்பூன் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும். 3 நிமிஷம் வேகவைத்து பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள். எண்ணெய் வடிந்தப்பின் உடனே அதை சக்கரை பாகுடன் சேர்த்துவிடுங்கள். சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கவேண்டும். பாகில் சேர்த்து உருண்டைகளை திருப்பி விட்டு  மூடி வைத்துவிடுங்கள். 2 மணி நேரம் ஊறவிட்டு பிறகு சாப்பிடலாம்.

 

Categories

Tech |