நடிகர் பரத் தனது 50-வது திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமா வாழ்க்கை பிரபல நடிகராக வலம் வருகின்றார் பரத். இவர் தனது 50-வது திரைப்படம் லவ் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படம் பற்றி அவர் கூறியுள்ளதாவது, எல்லாம் மொழிகளிலும் எல்லா திரைப்படத்தையும் கணக்கிடும் போது இது எனக்கு 50-வது திரைப்படம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் காதல் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகமானேன்.
எனது ஐம்பதாவது திரைப்படத்திற்கும் அதே டைட்டில் உடன் வெளியாவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவுக்கு வந்து 19 வருடங்கள் ஆகின்றது. முதல் படம் ஆரம்பித்து தற்போது வரை எந்த பின்புலமும் இல்லாமல் நான் தனியாக பயணித்து வருகின்றேன். அதில் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளேன். இரண்டையும் சமமாக கருதுவதால் நிதானமாக என்னால் பயணிக்க முடிகின்றது. அடுத்ததாக முன்னறிவான் திரைப்படத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.