Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்ப்பூர் திரைப்பட விழா… தமிழ் படங்கள் 5 தேர்வு… விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள்..!!!

ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாமனிதன், முகிழ், இரவின் நிழல், கார்கி, விசித்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.

இதுபோல மலையாளம், மராத்தி என பிறமொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற பிரச்சார சுடர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பார்த்திபன் சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

Categories

Tech |