வாரிசு திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் சிம்பு வேலை செய்து கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி இரு நாட்களுக்கு முன்பாக வெளியானது.
இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். மேலும் அவர் லிரிக்கல் வீடியோ பாடலில் நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் முன்னணி நடிகரான சிம்பு விஜயின் வாரிசு படத்தின் பாடலுக்காக சம்பளமே வாங்காமல் நடித்திருக்கின்றார். மேலும் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.