ரத்தம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை படகுழு வெளியிட்டு இருக்கின்றது. வீடியோவில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு உள்ளிட்ட மூவரும் இடம் பெற்றுள்ளார்கள். மேலும் ரத்தம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவர்கள் மூவரும் இடம்பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.
. @csamudhan இயக்கத்தில்
நண்பர்கள் @VetriMaaran, @vp_offl & @beemji சிறப்பு தோற்றத்தில் #ரத்தம் #rathamteaser டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு release ஆகிறது☄️பாசப்பறவைகள் கீழை📺⚒💣🔥⬇️ pic.twitter.com/byll8BdLEG
— vijayantony (@vijayantony) December 2, 2022