Categories
உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரர்..!!!

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரரின் வீடியோ வைரலாகி வருகின்றது.

விஜய் நடிப்பில் பொங்களுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்ததோடு சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றது. நம்ம ஊர் மக்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வைப் செய்ய வைத்துள்ளது ரஞ்சிதமே பாடல்.

அண்மையில் ஜப்பானிய நடன கலைஞர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இரண்டு லட்சத்திற்கும் மேல் பாலோவர்களைக் கொண்ட நடன கலைஞர் பதிவிட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஆறு லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |