அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள்.
பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் 12 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணை முடிந்த பிறகு வெளியே வந்த விஜய் தேவரகொண்டாவிடம் செய்தியாளர்கள் சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கு நான் விடையளித்திருக்கின்றேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்திருக்கின்றார்கள். அதே சமயம் அவர்கள் என்னை மீண்டும் வரவேண்டும் என கூறவில்லை. புகழ் என்பது அன்பை மட்டும் கொடுக்காது . சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது. இது வாழ்க்கையில் எனக்கு ஒரு அனுபவம் என தெரிவித்துள்ளார்.