Categories
சினிமா தமிழ் சினிமா

உயிர் போகும் நேரத்தில் கூட முழு மேக்கப் போட்டுக் கொண்டு… நயனை கலாய்த்த பிரபல நடிகை… காண்டான ரசிகாஸ்..!!!

லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார்.

அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகை ஒருவர் உயிர் போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டு நடித்துள்ளார். அது கமர்சியல் படவாகவே இருந்தாலும் எப்படி நடக்கும் என மாளவிகா மோகனன் தெரிவித்திருந்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா மோகனம் கலாய்த்து கூறியிருக்கின்றார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். இதனால் நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகி அவரை திட்டி தீர்த்து வருகின்றார்கள்.

Categories

Tech |