வெங்கட் பிரபுவின் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி, சரத்குமார், பிரியாமணி, சம்பத்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்திருக்கின்றார். இதனை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து பிரேம்ஜி தெரிவித்திருப்பதாவது, எனக்கு பரிசளித்ததற்கு நன்றி. என் இசைக்குரு யுவன் சங்கர் ராஜா.. லவ் யூ என பதிவிட்டு இருக்கின்றார். இதற்கு வெங்கட் பிரபு அப்போ எனக்கு பரிசு இல்லையா என கவலையுடன் பதிவிட்டு இருக்கின்றார். இதற்கு யுவன் சங்கர் ராஜா உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகின்றேன் என பதிலளித்து இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
So no gift for me @thisisysr https://t.co/OJyxMLSC5b
— venkat prabhu (@vp_offl) November 29, 2022