ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவிடோ என்ற நபர் அவசர சேவை மையத்திற்கு பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்ற 9000 முறை போன் செய்துள்ளார். தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் அரசு அவசர மையங்களை அமைத்து அவசர உதவி எண்களை அறிமுகம் செய்கின்றது. அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றது. ஆனால் பலரும் அவசர உதவி எண்களை தவறாக உபயோகம் செய்து வருகின்றனர். அவசர உதவி மையத்திற்கு அழைத்து அங்கு வேலை பார்க்கும் நபர்களிடம் ஆபாசமாக பேசுவது அல்லது தேவை இல்லாத விஷயத்தை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவிடோ என்ற 49 வயதான நபர் போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்தில் பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்றி அவமரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சுமார் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் உதவி மையத்திற்கு 9000 முறை போன் செய்துள்ளார். இதையடுத்து அவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.