அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதார அமைப்பின் செயலாளர் சஞ்சீவ முனசிங் கூறுகையில், “இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி இல்லாதவர்கள். இருப்பினும் இதற்கு முன்னர் மக்களை அதிகமாக பாதித்த கோவிட் -19 வைரஸின் வகையை விட தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வித்தியாசமானதாக இருக்கிறது. மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிப்பு நாம் நினைப்பதை விடவும் வேகமாக வேறு ஒருவருக்கு தொற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
தற்போது அரசு பிறப்பித்துள்ள தனிமைப் படுத்துதல் மற்றும் ஊரடங்கு சட்டம் ஆகிய காலகட்டத்திற்குள் நோய்த்தொற்று ஏதேனும் மக்களுக்கு ஏற்பட்டால் 0117966366 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரியப்படுத்தவும்” என அறிவுறுத்தியுள்ளார்.