மதுரையில் மணப்பெண் தேவை என்ற சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் சுவர்களை அலங்கரிக்கும் அரசியல் சினிமா போஸ்டர்களுக்கு இடையே ஒரு 90’ஸ் இளைஞரின் மணமகள் தேவை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெகன் என்ற 27 வயது இளைஞர் திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை மாநகர்,புறநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தன் தொடர்பு எண் உள்ளிட்ட முழு ஜாதக விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை அடித்து ஒட்டி பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Categories
90’ஸ் கிட்ஸ் பரிதாபம்…. தெருவெங்கும் மணமகள் தேவை சுவரொட்டி…. வைரல்….!!!!
