விவசாயிகளுக்கு ஆதரவான 9 வயது சிறுமியின் டுவிட்டர் பதிவு உலக அளவில் விவசாயிகளுக்கு ஆதரவை திரட்டியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா ட்விட்டர் மூலம் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இவரது முயற்சியின் மூலம் உலக அளவில் விவசாயிகள் போராட்டத்துக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உகாண்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் “,உங்களுக்கு உணவளிக்கும் கையை கடிக்க வேண்டாம் விவசாயிகளைப் பாதுகாப்போம்” என டுவிட் செய்துள்ளார்.