திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா நோய் தொற்றால் தமிழக மக்கள் வீடுகளிலே முடங்கி இருக்கின்றார்கள்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். கொடுக்கல, தேர்தல் வந்துச்சு அதனால ரூபாய் 1000 ரேஷன் கார்டுக்கு கொடுத்தாங்க. அப்பவே நம்முடைய கழக தலைவர்கள் அவர்கள் சொன்னாங்க… ஆட்சிக்கு வருவோம் நிச்சயமாக… மீதம் இருக்கக்கூடிய 4,000யை வழங்குவோம் என்று சொன்னார்கள். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் நாளே முதல் கையெழுத்து அனைவருக்குமே நான்காயிரத்தை வழங்கினார்கள் தளபதி அவர்கள்.
மகளிருக்கு இலவச கட்டணமில்லாத பேருந்து வசதியை உருவாக்கித் தந்தவர் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி… இப்படி சரித்திர சாதனைகளோடு ”நான் முதல்வன்” ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் என ஆயிரக்கணக்கான திட்டங்களை இந்த ஒன்றரை ஆண்டுகளில் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.