தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பி. கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை புதிதாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் பேடி சிங் பேடி நியமிக்கப்பட்டார். அதேபோல் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.