சிலி நாட்டில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 9 நபர்கள் பலியாகியுள்ளனர்.
சிலி நாட்டில் இருக்கும் ஓஹிகின்ஸ் என்னும் மாகாணத்தில் நேற்று பேருந்து ஒன்றில் வேளாண் ஊழியர்கள் மேற்கு பகுதியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்த ஒரு லாரி அந்த மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அந்த பேருந்தில் இருந்த ஓட்டுனர் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.