பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
திருமண மேடை அமைப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் 3 மாதங்களாக பணிசெய்து வருகிறார்கள்
செந்தூரம், குங்குமம், சந்தனம் மற்றும் அரிசி உள்ளிட்டவை அடங்கிய 1 இலட்சம் திருமண அழைப்பிதழ்கள் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவிற்காக ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக்ஷி கோவிலை மாடலாக கொண்டு மைதானத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.
மேலும் மணமகளுக்கான மேக்கப் பணிகளை மேற்கொள்ள நடிகை தீபிகா படுகோனே மேக்கப் மேன் அழைக்கப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர். ஸ்ரீராமுலு மகள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்