திருவண்ணாமலையில் காலையில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை அடுத்த அச்சிரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கன். இவர் மீன் வியாபாரி ஆவார் இவரது மனைவி சாந்தி நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்த குப்பைகளை அருகிலிருந்த குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார்.
அப்போது அங்கே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அவரது கழுத்திலிருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட வழக்குப்பதிவு செய்து செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.