கொரோனா தடுப்பூசி அதிகமாக வரவழைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதனால் அதிகமாக தடுப்பூசி வரவழைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்