தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் அஜித் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் தான். இரண்டு பேரின் ரசிகர்களுக்குமே அடிக்கடி போட்டி நிலவுவது வழக்கம்தான்.ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்கள் பொங்கலுக்கு மோத உள்ளன. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த AK 61 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் படபிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதனைப் போலவே நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே கடைசியாக 2014 ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா படங்கள் ஒரே நாளில் வெளியாகிய நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜயின் படங்கள் தற்போது பொங்கலுக்கு மோத உள்ளன. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்