Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

9 வயது சிறுமியிடம்…. அத்துமீறி நடந்த காவலாளி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை நேரு நகரில் ராஜா (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடைத்துறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்ற 2020 ஆம் வருடம் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார்.

இதையடுத்து ராஜா அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் இதுகுறித்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் “சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்ததால் ராஜாவுக்கு 20 வருடங்கள் மற்றும் சிறுமியை வெளியே விடாமல் தடுத்து வைத்ததற்கு 1 ஆண்டு என மொத்தம் 21 வருடங்கள் சிறைதண்டனையும், ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சிறை தண்டனையை ராஜா ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்” என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |